Home Tamil Cinema News பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா பேட்டி

பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா பேட்டி

144

hansika_motwani

போக்கிரி ராஜா படத்தில் ஜீவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். ராம்பிரகாஷ் ராயப்பா டைரக்டு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். இதில் சிபிராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து ஹன்சிகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, போக்கிரி ராஜா படத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பெண்ணாக வருகிறேன். பொதுச்சேவையில் எனக்கு ஈடுபாடு அதிகம். இந்த விஷயத்தில் எனக்கு தூண்டுதலாக இருப்பவர், பிரதமர் நரேந்திர மோடி. அவரது தூய்மை இந்தியா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்த படத்தில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று உழைக்கும் ஒரு பெண் வேடத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜீவா எனக்கு நண்பராக இருக்கிறார். அவருடன் நடிக்க இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு காட்சியில் நான் நடிக்கப்போவதாக தகவல் பரவி உள்ளது. அதில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. ‘அரண்மனை-2’ படத்தில் நான் நடித்துள்ள பேய் வேடத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன். அஜித்குமார், விக்ரம் போன்றோருடன் இதுவரை நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் அவர்களுடன் நடிப்பேன். நான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது சக மாணவனுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தற்போது யாரையும் காதலிக்கவில்லை.

நடிப்பு தொழிலை மட்டுமே காதலிக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்காக ஒரு இல்லம் கட்ட முயற்சித்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைய தெரியும்.

படப்பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளேன். அந்த ஓவியங்களை விரைவில் சென்னையில் கண்காட்சியாக வைத்து ஏலம் விட திட்டமிட்டுள்ளேன். அதில் வசூலாகும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடுவேன் என்று ஹன்சிகா கூறினார்.