அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறும் ஸ்ருதிஹாசன்

அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறும் ஸ்ருதிஹாசன்

129

Kamal-Is-Expecting-This-From-Shruti

சபாஷ் நாயுடு படத்தில் அப்பா கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் இணைந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமல் நாயகனாகவும், ஸ்ருதி இசையமைப்பளராகவும் இணைந்து விட்டனர்.

அதைதொடர்ந்து சபாஷ் நாயுடு படத்தில் நடிகர்களாக இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர். கூடவே இளைய மகள் அக்ஷரா ஹாசன் உதவி இயக்குநராக இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்தப்பதிவில் முதல் நாள் ஷூட்டிங் அட்டகாசமாக இருந்தது.

அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி, கெளரவம். பாசிட்டிவிட்டியை நமக்குள் கொண்டு வந்து விடுகிறார். அவர் செட்டில் இருந்தாலே போதும். அப்படியே நமக்கும் அது தொற்றிக் கொள்கிறது என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY