இணையதளத்தில் திருட்டு வீடியோவாக வெளியானதா கபாலி!

இணையதளத்தில் திருட்டு வீடியோவாக வெளியானதா கபாலி!

87

Has Kabali Been Leaked Online

தயாரிப்பாளர் தாணு கபாலி படம் திருட்டு வீடியோவாக வெளியாகிவிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடர்ந்து 225 திருட்டு வீடியோ இணையத் தளங்களை முடக்கும் உத்தரவைப் பெற்றார்.

அவரது இந்த நடவடிக்கையால் ஆத்திரப்பட்ட திருட்டு வீடியோ இணையதளங்கள், கபாலியை வேறு சர்வர் மூலம் வெளியிட்டே தீருவோம் என்று ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் அறிவிப்பாக வெளியிட்டன.

இந்த நிலையில் கபாலி படத்தின் திருட்டு வீடியோ டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையத்தில் வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த டார்க் வெப் என்பது போதை பொருள் விற்பனை செய்வது, கொலை செய்வதற்கு ஆட்கள் தயார் செய்துகொடுப்பது, குழந்தைகளின் பாலியல் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது, துப்பாக்கிகள் போன்ற தீவிரவாதத்துக்கு துணைபோகும் ஆயுதங்கள் விற்பது போன்றவற்றுக்கு உதவும் தளங்கள்.

இதுகுறித்து உண்மையிலேயே கபாலி படம் அப்படி வெளியாகிவிட்டதா என்று விசாரித்தபோது, அந்த தகவல் ஒரு வதந்தி என்று தெரியவந்துள்ளது.

யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த புரளியை கிளப்பி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY