Home Tamil Breaking News மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை.. ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்..

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை.. ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்..

77
SHARE

மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றன. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here