Home Tamil Movie Reviews ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்

ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்

290
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து குறும்பட இயக்குனர் பாஸ்கரின் இயக்கத்தில் வைபவ் ரெட்டி, ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், விடிவி கணேஷ், கருணாகரன் நடித்து உருவாக்கப்பட்ட கதை தான் “ஹலோ நான் பேய் பேசுறேன்”.

2.5
இயக்கம்: பாஸ்கர்
ஒளிப்பதிவு: பானுமுருகன்
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: சுந்தர் சி
நடிகர்கள்: வைபவ் ரெட்டி, ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், விடிவி கணேஷ், கருணாகரன்

இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து குறும்பட இயக்குனர் பாஸ்கரின் இயக்கத்தில் வைபவ் ரெட்டி, ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், விடிவி கணேஷ், கருணாகரன் நடித்து உருவாக்கப்பட்ட கதை தான் “ஹலோ நான் பேய் பேசுறேன்”.

1300-X-850-_1

இருட்டில் வந்து மிரட்டிய பேய்கள், சீலிங் ஃபேனில் தொங்கிக்கொண்டு அச்சுறுத்தும் பேய்கள், வெறுமென பின்னாடி வந்து நின்று மிரட்டும் பேயகளுக்கு மத்தியில் இந்த பேய் முற்றிலும் வித்தியாசப்படுகிறது.

திருடனான வைபவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல், காதல் கல்யாணமாக கனியும் நேரத்தில் தான் திருடிய ஒரு மொபைல் போன் மூலம் பேயிடம் மாட்டிக்கொள்கிறார் வைபவ், இவர் மாட்டியதுபோதாதென்று இவரின் வருங்கால மச்சான்களான VTV கணேஷ், அவரின் சகோதரர் சிங்கப்பூர் தீபன்என கூட்டாக மாட்டிக்கொள்கிறார்கள்.
பின் எவ்வாறு பேயிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

HNPP_movie_still

வைபவ் காதலித்து திருமணம் செய்து கொள்ள போகும் பெண் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. படத்தில் பேயாக வரும் ஓவியாவே அதிகமாக வரவில்லை. முழுக்க முழுக்க காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் பாஸ்கர். காமெடி வசனங்கள் மற்றும் விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன் ஆகியோரின் டைமிங் காமெடி வசனங்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. படத்திற்கு பலமாகவும் இந்த டைமிங் வசனங்கள் உள்ளன.

திரைக்கதையில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியையே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் பேய் கதாப்பாத்திரத்துக்கும் பேய் படத்துக்கான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாகவே வந்திருக்கும்.

p1-86181பல காமெடி நடிகர்களை படத்தில் பயன்படுத்தியது காரணமில்லாமலும், சுவாரஸியம் இல்லாமல் இருக்கிறது. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பேய் படம் என்கின்ற உணர்வை ரசிகர்களுக்கு தரவில்லை. கதை, திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸியம் சேர்த்து, லாஜிக் விஷயங்களை சரியாக கையாண்டிருந்தால் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ ‘நன்றாகவே பேசியிருக்கும்’.

hnpp-image007

பானுமுருகனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு படத்திற்கு தேவையான அளவு உதவியுள்ளது. சித்தார்த் விபின் இசையில் மட்டுமல்லாமல் படத்தில் தோன்றியும் கலக்கியுள்ளார்.

மொத்ததில் “ஹலோ நான் பேய் பேசுறேன்” – நன்றாகவே பேசியிருக்கும்