கபாலிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கபாலிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

82

High Court Ruling in Kabali Movie Ban Case

கபாலி படத்தின் முன்பதிவு திங்கட்கிழமை தொடங்கியது. ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. ரசிகர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் டிக்கெட் அதிக விலையென்றாலும் வாங்கினர்.

இந்த நிலையில் அதிகாலை காட்சிகள் மற்றும் ஸ்பெஸஷல் காட்சிகளுக்கு 600 ரூபாய் வரை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘டிக்கெட் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பலமடங்கு அதிகமாக சட்டத்திற்கு விரோதமாக விற்கப்படுகிறது, மேலும் ஒரே நாளில் சிறப்பு காட்சிகள் என்ற பெயரில் அதிக ஷோ திரையிடுகின்றனர். எனவே இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தடையேதுமின்றி காபாலி வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY