Home Tamil Cinema News ரஜினிக்கு வில்லனாக வரும் இந்தி ஹீரோ!

ரஜினிக்கு வில்லனாக வரும் இந்தி ஹீரோ!

127

neil-nitin

ரஜினி நடிக்க உள்ள எந்திரன் 2-ம் பாகத்திற்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் இயக்குனர் ஷங்கர் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ரோபோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல் நடிகை எமி ஜாக்ஸனும் ரோபோவாக நடிக்க உள்ளார். கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். இவரை எந்திரன் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதுபற்றி பேச்சு வார்த்தை நடக்கிறது. இவர் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

வரும் 12ம் தேதி ரஜினியின் பிறந்த தினத்தையொட்டி எந்திரன் 2ம் பாகத்தின் தொடக்க விழா பூஜையுடன் நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் கடும் மழையால் ஏற்பட்டபாதிப்பதையடுத்து தொடக்க விழா தள்ளிவைக்கப் பட்டுள்ளது.