மெரீனா போராட்டத்தை சிதைக்க சதி நடப்பதாக கூறும் ஹிப்ஹாப் தமிழா ஆதி

மெரீனா போராட்டத்தை சிதைக்க சதி நடப்பதாக கூறும் ஹிப்ஹாப் தமிழா ஆதி

26

சென்னை மெரீனாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சிதைக்க சிலர் சதி செய்வதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி முகநூலில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

I am safe and this is my stand என்று போட்டு வீடியோவில் பேசியுள்ளார் ஆதி. அந்த வீடியோவில் அவர் மெரீனா போராட்டத்தை திசை திருப்ப சிலர் சதி செய்கிறார்கள். சில அமைப்புகள் போராட்டத்தை சிதைக்கவும்,திசை திருப்பவும் முயல்கின்றன.

தேசத் தலைவர்களை ஆபாசமாக திட்டுவது சரியானதல்ல என்றும் கூறியுள்ளார் ஆதி. போராட்டத்தைக் கலைக்க சில சமூகவிரோத சக்திகள் முயன்று வருவதாகவும் ஆதி குற்றம் சாட்டியுள்ளார்.

 

I am safe and this is my stand

Posted by Hiphop Tamizha on Sunday, January 22, 2017

NO COMMENTS

LEAVE A REPLY