Home Tamil Breaking News கங்கனா ரனாவத் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிய ரித்திக் ரோஷன்

கங்கனா ரனாவத் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிய ரித்திக் ரோஷன்

175

55e73381afd19.image

பாலிவு சினிமாவில் நடனத்துக்கு பெயர் போன ரித்திக் ரோஷனும், கவர்ச்சி நடிப்பில் அசத்தும் கங்கனா ரனாவத்தும் சேர்ந்து ஆஷிக்கி 3 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தில் கங்கனா நடிக்கவில்லையென்று கூறப்படுகிறது.

ஆஷிக்கி 3 படத்தில் கங்கனாவை ஹீரோயினாக்க தான் இயக்குனர், தயாரிப்பாளர்கள் விரும்பியுள்ளனர். ஆனால் அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் படத்தில் கங்கனாவை ஒப்பந்தம் செய்யவில்லை.

கங்கனாவும், மனைவியை பிரிந்த ரித்திக் ரோஷனும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால் ரித்திக் சீரியஸாக இல்லாததால் கங்கனா அவரை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

கங்கனாவிடம் ரித்திக் ரோஷனை காதலித்தது பற்றி கேட்டபோது அவர் கூறுகையில், நான் சிங்கிளாக உள்ளேன். யாரையும் காதலிக்கவில்லை. படத்தில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லை என்று கூறினார்.

மேலும் காதல் என்பது குழந்தை போன்றது. அதை கவனிக்காவிட்டால் இறந்துவிடும். அதன் பிறகு வருத்தப்பட வேண்டி இருக்கும் என்று கங்கனா தெரிவித்துள்ளார். இந்தப்பேச்சு ரித்திக்கை குறிப்பிட்டுத்தான் கங்கனா கூறினார் என பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.