ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறும் தமன்னா!

ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறும் தமன்னா!

129

tamanna

நடிகை தமன்னா தனது கவர்ச்சி கலந்த நடிப்பால் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தோழா படத்தில் இவரது நடிப்பும், ஆடைவடிவமைப்பும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா தனது திரையுலகம் குறித்து மும்பையில் அளித்த பேட்டியில்,

‘எனக்கு தனிமை பிடிக்காது. எப்போதும் என்னை சுற்றி நான்கு பேர் இருந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதற்காகவே சினிமாவில் நிறைய தோழிகளை சம்பாதித்து வைத்து இருக்கிறேன். காஜல் அகர்வால் எனக்கு நெருக்கமான தோழியாக இருக்கிறார்.

இருவரும் அடிக்கடி சந்தித்து எல்லா விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவோம். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும்போது நான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி நேரத்தை செலவிடுவேன். அந்த நாயுடன் ஒருநாள் முழுவதும் விளையாடி இருக்கிறேன். சலிப்பே வந்தது இல்லை.

முன்பெல்லாம் ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டுவது இல்லை. ஆனால் இப்போது ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை விரும்பி படிக்கிறேன். ஆன்மிக கதைகளை கேட்கிறேன்.

எனக்கு பிடித்த நிறம் சிவப்பு, நீலம். இது தவிர, வெள்ளை ஆடைகள் அணியவும் விருப்பம் உண்டு. அடிக்கடி ஷாப்பிங் மால்களுக்கு சென்று பொருட்கள் வாங்குவேன். பெரிய நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிடுவேன். தெருவோர ஓட்டல்களிலும் சாப்பிட தயங்க மாட்டேன்.

எனக்கு சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனக்கு பிடித்த நடிகைகள் படங்களை தியேட்டர்களில் போய் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கண்ணாடி முன் நின்று அவர்களை போல் நடித்து பார்ப்பேன். அதுதான் என்னை சிறந்த நடிகையாக ஆக்கி இருக்கிறது என்று தமன்னா கூறினார்.

தமன்னா தற்போது கத்திச்சண்டை படத்தில் விஷால் ஜோடியாகவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் அபினேத்ரி என்ற படத்தில் பிரபுதேவாவுடனும் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY