Home Tamil Cinema News நான் ருசியாக சமைப்பேன்: நடிகை சுருதிஹாசன் பேட்டி

நான் ருசியாக சமைப்பேன்: நடிகை சுருதிஹாசன் பேட்டி

121

shruti_hassan_hot

சுருதிஹாசன் நடிப்பு தவிர இசை, பாடல், ஓவியம் போன்றவற்றிலும் திறமை காட்டி வருகிறார். இதில் மட்டுமில்லாலல் அவருக்கு சமையலும் அத்துபடியாம். ருசியாக சமைக்க தெரியும் என்கிறார் பேட்டியளித்துள்ளார். சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:

எனக்கு நன்றாக சமையல் செய்ய வரும். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் போது, சமையல் கட்டில்தான் என்னை பார்க்க முடியும். விதம் விதமாக சமைப்பேன். இட்லி, தோசை, வடைகள் சமைப்பதில் நான் ஸ்பெஷல். வெளியில் ஓட்டல்களில் சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவுகள் பற்றி குறிப்பெடுத்துக் கொள்வேன்.

அவற்றில் என்னென்ன மசாலா சேர்த்து சமைக்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்வேன். வீட்டுக்கு வந்ததும் அதுபோல் சமைத்து பார்ப்பேன். சமையலில் ஆர்வம் இருந்தாலும் சமையலுக்கான பொருட்களை சரியான அளவில் சேர்ப்பது முக்கியம். அதில் குளறுபடி இருந்தால் ருசி போய்விடும்.

நான் கவனமாக இருந்து தேவையான அளவு மசாலாவை சேர்ப்பேன். சமைக்கும்போது எல்லா பொருட்களையும் சமையல் அறையில் கண்டபடி எடுத்து பரப்பி வைத்து இருப்பேன். அவற்றை எடுத்து மீண்டும் அடுக்கி வைப்பதுதான் எனக்கு பிடிக்காத விஷயம். என்று தனது சமையல் ஆசைப்பற்றி மனம் திறந்துள்ளார்.

சுருதிஹாசன் தற்போது தமிழில் முன்னனி நடிகையாக உள்ளார். அவர்  நடித்த ‘வேதாளம்’ படம் சமீபத்தில் வெளிவந்தது. தொடர்ந்து அவர் ‘சிங்கம்-3’ படத்தில் நடிக்கிறார். இந்தியிலும், தெலுங்கிலும் தலா 2 படங்கள் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.