Home Tamil Cinema News என் பெயரில் ஜாதி சேர்த்து எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை – பார்வதி

என் பெயரில் ஜாதி சேர்த்து எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை – பார்வதி

129

parvathi-menon-at-dailomo-4

நடிகை பார்வதி மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் தமிழில் ‘சென்னையில் ஒருநாள்’, ‘உத்தமவில்லன்’, ‘மரியான்’ படங்களில் நடித்துள்ளார். பார்வதி தனக்கு பிடித்த வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

தற்போது பார்வதி என்ற பெயரில் மேலும் ஒரு நடிகை நடிக்க வந்திருக்கிறார். இருவரையும் அடையாளப்படுத்தி காட்டுவதற்காக இவரை பார்வதிமேனன் என்றும், புதிய நடிகையை பார்வதி நாயர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இதற்கு முதலில் நடிக்க வந்த பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து கூறிய அவர் நான் எப்போதுமே ஜாதி அடையாளத்தை விரும்புவதில்லை. ஆனால் திடீரென்று எனது பெயருக்குப் பின்னால் மேனன் என்கிற சாதி பெயரை போடுகிறார்கள். ‘என் பெயர் பார்வதி மட்டுமே, என் பாஸ்போர்ட்டில் கூட அப்படி தான் உள்ளது.

என்னை இனி பார்வதி மேனன் என அழைக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார். மேலும், என் பெயரில் ஜாதி சேர்த்து எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று புரட்சிகரமாகவும் பேசியுள்ளார்.