Home Tamil Cinema News சம்பளம் பற்றி எனக்கு கவலையில்லை – சிவகார்த்திகேயன்

சம்பளம் பற்றி எனக்கு கவலையில்லை – சிவகார்த்திகேயன்

134

abc

தயாரிப்பாளர் கடன் பிரச்சனை, சென்னை மழை வெள்ளம் போன்ற காரணங்களால் பல முறை வெளியிட முடியாமல் தடையேர்பட்டாலும் தற்போது பொங்கலுக்கு வெளிவந்து திரையரங்கில் வெற்றி நடைப்போட்டு வருகிறது ரஜினிமுருகன். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.முலுநீல காமெடி படமாக இந்த படத்தினை இயக்குனர் பொன்ராம் உருவாக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் வெளியீடு குறித்து சிவகார்த்திகேயன் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் கூறுகையில் ‘ரஜினிமுருகன் படம் ரசிகர்களை கவர்ந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இருப்பினும் இப்படத்திற்காக என் சம்பளம் அனைத்தையும் விட்டுக்கொடுத்தேன், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மைனஸ் 50 லட்சம் தான் என் சம்பளம். சம்பளம் பற்றி எனக்கு கவலையில்லை, படம் வந்ததே போதும். இனி இதுபோல் என் படங்கள் தாமதமாக வராமல் பார்த்துக்கொள்வேன்’ என்று அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.