Home Tamil Cinema News காஜல் அகர்வாலுக்கு கிளாமர் வேடங்களில் நடிக்க விருப்பமில்லையாம்

காஜல் அகர்வாலுக்கு கிளாமர் வேடங்களில் நடிக்க விருப்பமில்லையாம்

138

kajal_agarwal

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாகத் திகழும் காஜல் அகர்வால் தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் மிகவும் கவர்ச்சி காட்டி நடித்து வந்தவர் காஜல் அகர்வால். நடிப்பை விட காஜலின் கவர்ச்சி தான் படங்களில் அதிகம் இருக்கும் என்ற பெயரை வாங்கிய காஜல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இனிமேல் நடிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஏற்பது என்று சபதமேற்றிருக்கும் காஜல் அதன் முதல் கட்டமாக டு லப்ஸான் கி கஹானி என்ற படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இதற்காக பார்வையற்ற பள்ளிக்கு சமீபத்தில் சென்று அவர்களின் உடல் மற்றும் செயல்பாடுகளை கவனித்து இருக்கிறார். மேலும் தான் கவனித்தவற்றை படத்தில் பயன்படுத்தவும் காஜல் முடிவு செய்திருக்கிறார்.

தமிழில் தற்போது கவலை வேண்டாம் படம் மட்டுமே காஜலின் கைவசம் உள்ள நிலையில், விக்ரம் அடுத்தாக திரு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

படக்குழுவினரிடம் இந்த விஷயத்தை குறித்து விசாரித்த போது, அவர்கள் மறுத்திருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.

விக்ரமுடன் நடிக்க இருந்த முதல் வாய்ப்பை தவறவிட்ட காஜல் அகர்வால், தற்போது அந்த வாய்ப்பை பிடிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here