Home Tamil Cinema News நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் – நடிகை தீபிகா படுகோனே

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் – நடிகை தீபிகா படுகோனே

158

deepika-padukone

பாலிவுட்டில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் வெளியான பாஜிராவ் மஸ்தானியும் கோடிக்கனக்கில் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து தீபிகா பேட்டி ஒன்றில் கூறுகையில்,

2015ம் ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. 2013ம் ஆண்டு தான் எனக்கு ஸ்பெஷல் என்று நினைத்தேன். ஆனால் இந்த ஆண்டில் மூன்று ஸ்பெஷல் வெளியீடுகள் மற்றும் பல அருமையான நினைவுகள் என சிறப்பாக அமைந்துள்ளது.

இயக்குனர் கதையை கூறும்போது அது எனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பேன். நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நானாக தான் முடிவு செய்வேன். அது வெற்றியோ, தோல்வியோ என்னுடயை பயணமாக இருக்க வேண்டும். பிறரின் முடிவுகளை நம்ப மாட்டேன்.

என் படம் எவ்வளவு வசூலிக்கிறது என்று மட்டுமே நான் பார்ப்பது இல்லை. ஒரு படத்தின் வெற்றியை அது எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதை வைத்து முடிவு செய்வது வருத்தம் அளிக்கிறது.

என் தங்கை தான் என் படங்கள் பற்றி விமர்சனம் செய்வார். என் குடும்பத்தார் என் படங்களை பார்த்தாலும் என் தங்கை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என விமர்சிப்பார் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here