Home Tamil Cinema News நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை – ஸ்ருதிஹாசன்

நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை – ஸ்ருதிஹாசன்

129

shruti-haasan

நடிகை ஸ்ருதிஹாசன் கமலின் மகள் என்ற அந்தஸ்த்தில் தமிழ் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர், கமல் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர், இந்தியிலும், தமிழிலும் நடிக்கத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து விட்டார் ஸ்ருதிஹாசன். இதை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் S3 படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை ஸ்ருதி நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு பாடலாவது பாடி விடுவார். ஆனால், S3 படத்தில் எந்த ஒரு பாடலும் இவர் பாடவில்லையாம்.

இதுக்குறித்து அவரிடம் கேட்கையில் ‘நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை, இயக்குனர்கள் அல்லது இசையமைப்பாளர்கள் விரும்பினால் மட்டுமே பாடுவேன்’ என கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறும்போது, இந்த படம் போலீஸ் கதை என்பதால், இதில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்கவில்லை. இருந்தாலும், ரசிகர்களை திருப்திபடுத்தும்விதமாக இந்த படத்தில் எனது கதாபாத்திரம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.