Home Tamil Cinema News என் ஆதரவு ஜல்லிக்கட்டுக்குத் தான் – நடிகர் தனுஷ்

என் ஆதரவு ஜல்லிக்கட்டுக்குத் தான் – நடிகர் தனுஷ்

127

dhanush7591

தனுஷ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் என்றும், பீட்டா அமைப்பின் தூதராக செயல்படுகிறார் என்றும் சமூக வலைதளங்கம் மற்றும் மீடியாக்களில் செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து பலரும் தனுஷுக்கு எதிராக கடும் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு தனுஷ் பதலளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு குறித்து தனுஷ் கூறும்போது, ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு குறித்து நான் மாற்று கருத்து தெரிவித்ததாக வலம் வரும் தகவல் வெறும் வதந்தி. நான் அவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை.

சிலர் நான் பீட்டா அமைப்பின் விளம்பர தூதர் என்று கூறுகின்றனர். ஆனால் நான் பீட்டாவின் விளம்பர தூதரும் அல்ல. சைவ உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர் என்பதால் பீட்டா எனக்கு ஒருமுறை விருது வழங்கியது. அவ்வளவுதான். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here