Home Tamil Cinema News இந்தியா-பாக் பிரிவால் பாதித்த குடும்பத்தில் பிறந்தேன் டாப்ஸி உருக்கம்

இந்தியா-பாக் பிரிவால் பாதித்த குடும்பத்தில் பிறந்தேன் டாப்ஸி உருக்கம்

141

Taapsee-Pannu

டாப்ஸி இந்தியில் ‘காஸி’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவு நடந்தபோது நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

டாப்ஸி ஹீரோயினாக நடிக்க ராணா ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி டாப்ஸி கூறியது: இந்த படத்தை மனப்பூர்வமாக ஏற்று நடிக்கிறேன். எனது தாத்தா, பாட்டி குடும்பம் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பாதிக்கப்பட்டது. லாகூரில் அவர்கள் அப்போது வசித்தனர். பிரிவினையால் அனைத்து சொத்துக்களையும் இழந்து நிற்கதி ஆனார்கள்.

சிறுவயதில் அவர்கள் என்னிடம் இதுபற்றி கதை கதையாக கூறுவார்கள். இந்த நினைவுகள் இப்போது என் கண் முன் வந்து நிற்கிறது. இந்திய வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது. தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பம் இதில் பல அனுபவங்களை பெற்றிருக்கிறது.

இப்போதுள்ளவர்களுக்கு அந்தநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வலி என்ன என்பதை உணர்ந்துகொள்வது கடினம்தான். அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்ற முறையில் இக்கதையில் எனக்கு ஈடுபாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.

தமிழில் வந்தான் வென்றான், ஆடுகளம், வை ராஜா வை போன்ற படங்கள் நடித்தவர் டாப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.