Home Tamil Cinema News ஈட்டி படத்திற்காக இரண்டு வருடம் கடுமையாக உழைத்தேன் – அதர்வா

ஈட்டி படத்திற்காக இரண்டு வருடம் கடுமையாக உழைத்தேன் – அதர்வா

133

Atharva-Latest-Photoshoot

திரையுலகில் சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் பார்த்தவர் அதர்வா. பரதேசி படத்திற்கு பிறகு அதர்வா திரைப்பயணமே மாறியது. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்தால், அடுத்தடுத்த படங்களின் தோல்வி அவரை மிகவும் பாதித்தது. இருப்பினும் மனம் தளராத அதர்வா அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகின்றார்.

தற்போது சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த ஈட்டி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது. இதை கொண்டாடும் பொருட்டு நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது.

இதில் அதர்வா இந்த நாளுக்காக தான் இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன், இப்படத்திற்காக 2 வருடம் கடுமையாக உழைத்தேன் என கூறினார். ஈட்டி வெற்றியினை தொடர்ந்து அதர்வாவுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here