Home Tamil Breaking News ஐ.பி.பி.எஸ்-ன் அதிகாரி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

ஐ.பி.பி.எஸ்-ன் அதிகாரி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

157

3

பொதுத்துறை வங்கிகளின் கிளரிகல் மற்றும் அதிகாரி பணி இடங்கள் ஐ.பி.பி.எஸ் அமைப்பினால் பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் முறைகளில் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளிலுள்ள சிறப்பு அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.பி.எஸ்., அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் ஐ.டி., ஆபிசர், அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர்., அதிகாரி, மார்கெடிங் ஆபிசர், சார்டர்டு அக்கவுண்டண்டு போன்ற பதவிகளில் இணைய முடியும்.

ஐ.பி.பி.எஸ்., நடத்தும் இந்த பொது எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட இதர மையங்களிலும் நடைபெற்றது. தற்போது அந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள் பற்றிய தகவல்களுக்கு ஐபிபிஎஸ் இணைய பக்கத்தை க்ளிக் செய்யவும் :

‘CWE – Specialist Officers – V – Combined Result For CWE & Interview’

CWE PO/MT V’ for results

‘CWE Clerks V’ for result

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here