Home Tamil Movie Reviews இது நம்ம ஆளு – விமர்சனம்

இது நம்ம ஆளு – விமர்சனம்

349
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

டி.ஆருடைய சிம்பு சினிஆர்ட்ஸ் தயாரிக்க, சிம்புவின் தம்பி குறளரசனின் இசையில் சிம்பு தனது ஆஸ்தான நாயகி நயன்தாராவுடனும் ஆண்ட்ரியாவும் ஜோடி சேர்ந்து நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில், வந்திருக்கும் திரைப்படம் தான் ‘இது நம்ம ஆளு’. இந்தப் படத்தை ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கிறது.

3.5
இயக்கம்: பசங்க பாண்டிராஜ்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இசை: குறளரசன்
தயாரிப்பு: சிம்பு சினிஆர்ட்ஸ்
நடிகர்கள்: சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி

டி.ஆருடைய சிம்பு சினிஆர்ட்ஸ் தயாரிக்க, சிம்புவின் தம்பி குறளரசனின் இசையில் சிம்பு தனது ஆஸ்தான நாயகி நயன்தாராவுடனும் ஆண்ட்ரியாவும் ஜோடி சேர்ந்து நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில், வந்திருக்கும் திரைப்படம் தான் ‘இது நம்ம ஆளு’. இந்தப் படத்தை ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கிறது.

Idhu-Namma-Aalu-Trailer-700x389

கதைப்படி, ஐ.டி இளைஞர் சிவாவாக சிம்பு வருகிறார், அவருடைய சகோ சூரி ஆடம்பர வாழ்க்கையுடன் சந்தோஷமாக அரட்டை, கலாட்டா என செல்ல, சிம்புவிற்கு நயன்தாராவுடன் நிச்சயதார்த்தம் நடக்கின்றது.

நயன்தாரா சிம்புடனான முதல் மீட்டிங்கிலேயே ஆண்ட்ரியா காதல் பற்றி கேட்கிறார், சிம்புவும் அதிர்ச்சியுடன் இந்த இடம் செட் ஆகாது என்று கிளம்ப, நயன்தாரா திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்.

அதன் பின் மெல்ல ஆண்ட்ரியா பற்றி கேட்கிறார்.சிம்புவும் ப்ளாஷ்பேகை ஓபன் செய்ய, ஆண்ட்ரியாவுடன் ஒரு அழகிய காதல், எப்போதும் போல் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்ல பின் ஒரு சண்டையில் பிரேக் அப், என்று ப்ளாஷ்பேக்கை முடிக்கின்றார்.

fgN8S3TcIdhu-Namma-Aalu-bloopers-on-Valentine’s-Day

சிம்புவிற்கே தெரியாமல் சூரி நயன்தாராவை நோட்டமிட, அவருக்கு ஒரு காதலர் இருப்பதாக தெரிய வருகிறது.இதை தொடர்ந்து இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை வர, பிறகு அம்மு, செல்லம், சாரி என மீண்டும் இணைகிறார்கள்.

இவர்கள் இணைந்த நேரத்தில் சிம்பு-நயன்தாரா குடும்பத்தினருக்கிடையே சண்டை வர இந்த திருமணம் நிற்கும் நிலைமை வருகிறது. பிறகு எப்படி இவர்கள் இணைந்தார்கள் என்பதான் மீதிக்கதை.

ஐடி கம்பெனியில் மேனேஜராக வரும் சிம்பு, ரொம்பவும் மெனக்கெடாமல் சிம்பிளான டயலாக், சிம்பிளான நடிப்பு என அசத்தியிருக்கிறார். காதல் பற்றி ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் பஞ்ச் டயலாக்குகள் இன்றைய காதலர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.

maxresdefault

வழக்கமான ஆக்ஷன் காட்சிகள் என இல்லாமல், ஒரு பெண்ணிடம் அடங்கிப் போகும் வாலிபராக இந்த படத்தில் நடித்து கைத்தட்டல் பெறுகிறார்.

நயன்தாரா ஒரு அழகான குடும்ப பெண்ணாக அனைவர் மனதிலும் எளிதாக பதிகிறார். ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்தை ஆக்ரோஷமாக காட்டினாலும் பின்னர் காதலுக்குள் சிக்கியவுடன் உருகி உருகி காதலிக்கிற சாதாரண பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

சிம்புவும், நயன்தாராவும் பேசும் காட்சிகள் திரையில் நீண்டநேரமாக வந்தாலும் படத்தை கலகலப்பாக கொண்டுபோவது சூரியின் காமெடிதான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையில் சூரி கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் எல்லாமே கலகலப்பு. படம் முழுக்க சிம்புகூடவே பயணமாகியிருக்கும் சூரிக்கு இந்த படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Idhu-Namma-Aalu-Movie-Stills-35

சிஐடியாக வரும் சந்தானம் ஒரு சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா பிளாஷ்பேக் காட்சியிலே வந்தாலும் அழகாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சிம்பு, ஆண்ட்ரியா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. மற்றபடி, ஜெயப்பிரகாஷ், மதுசூதனன், உதய் மகேஷ், அர்ஜுனன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

பிரவின்.கே.எல்.லின் படத்தொகுப்பு அருமை, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியப் பதிவாக மின்னுகிறது. டி.ஆர்.குறளரசனின் இசையில், ‘இது நம்ம ஆளுன்னு மாமன் வெயிட்டிங்’, ‘எனக்காக பொறந்தாலே’ ‘என்ன காத்தாக வந்த பொண்ணு மூச்சாக நீன்னாலே’ உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் அருமை.

மொத்தத்தில் “இது நம்ம ஆளு” – பார்க்க வேண்டிய ஆளு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here