இசைஞானி இளையராஜா இன்று தனது 73 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்

இசைஞானி இளையராஜா இன்று தனது 73 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்

127

Ilayaraja 73

40 வருடங்களில் 1௦௦௦ படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை படைத்திருக்கும் இசைஞானியின் பிறந்தநாளை, தேசிய அளவில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்று அன்னக்கிளியில் தொடங்கிய இவரின் இசைப்பயணம் தாரை தப்பட்டை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.

ராஜா – மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த தளபதி வட இந்தியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது, ராஜா இந்த படத்திற்கு மும்பையில் இசையமைத்து கொண்டிருக்கும் போது ஒரு பாலிவுட் கலைஞர் இனி இவரை இங்கு இசையமைக்க கூட்டி வராதீர்கள், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் என கூறினாராம்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ராக்கமா கையத்தட்டு’ பாடல் இன்றும் உலக அளவில் சிறந்த பத்து பாடல்கள் என்ற லிஸ்டில் இடம்பிடித்துள்ளது, அதேபோல் மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் டைம்ஸ் பத்திரிக்கையில் சிறந்த 100 படங்கள் லிஸ்டில் இடம்பெற்றது. நாயகன் இளையராஜாவிற்கு 400வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தான் பிறந்தநாள் இசையுலக மேதைக்கு தி நியோ டிவி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY