Home Tamil Cinema News இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் சாதனையாளர் விருது

இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் சாதனையாளர் விருது

128

21-1453354051-kerala-honours-maestro-ilaiyaraaja-600

கேரள அரசு சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும், திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. இந்த விழா வருகிற 27-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. நடன, இசை விழாவை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளாக சாதனையாளர்களுக்கு கேரள அரசு சார்பில் நிசாகந்தி விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு இசை அமைப்பாளர் இளைய ராஜாவுக்கு சாதனையாளர் விருதை முதல்-மந்திரி உம்மன்சாண்டி வழங்கினார். விழாவில் முதலமைச்சர் உம்மன்சாண்டி பேசும் போது இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்று விட்டது.

கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.