Home Tamil Cinema News வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீதி வீதியாக உதவி செய்த இளையராஜா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீதி வீதியாக உதவி செய்த இளையராஜா

148

Ilayaraja_flood_relief

இளையராஜா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1 லட்சம் போர்வைகளை வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர். அது அட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேரில் சென்று உதவிகள் செய்துவருகிறார்.

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். வெள்ளத்தால் இவரும் பாதிக்கப்பட்டாலும் தனது உதவியாளர்கள் பேச்சினையும் மீறி மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார்.

தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார். முன்னதாக இளையராஜா பார்வையற்றோர் பள்ளிக்கு சென்று அங்குள்ள பார்வையற்ற மாணவர்களுக்கு உதவிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.