Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 17/04/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 17/04/2016

302
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்


mesahamமேசம்: இன்று உங்களுக்கு உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சிலர் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


kadakamகடகம்: இன்று நீங்கள் எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து அதிகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


simam

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


kanni

கன்னி: இன்று உங்களை சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை  கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


viruchigam

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


dhanusuதனுசு: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்
பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.


magaramமகரம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kumbam

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள் நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


meenam

மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here