Home Tamil Cinema News கவர்ச்சி காட்டி நடிக்க நான் தயாரில்லை – ராதிகா ஆப்தே

கவர்ச்சி காட்டி நடிக்க நான் தயாரில்லை – ராதிகா ஆப்தே

473

Radhika-Apte-Sexy-Cleavage-Photos-1

தமிழில் தற்போது ரஜினி ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இதற்கு முன்பு டோனி, வெற்றிச் செல்வன் படங்களில் குடும்பபாங்காக நடித்துக்கொண்டிருந்த ராதிகா ஆப்தேவை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலிவுட் பக்கம் சென்றவர் குறும்படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆண், பெண் உறவுபற்றி பகிரங்க கருத்து வெளியிட்டார். இதையடுத்து பரபரப்பாக பேசப்பட்டார். அதையடுத்து இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை கைப்பற்றியவர் ராதிகா. தற்போது அவரது கால்ஷீட்டுக்கு பலர் காத்திருக்கின்றனர்.

ஹீரோயின்கள் குத்து பாடலுக்கு ஆடுவதுபற்றி கருத்து கேட்டபோது சூடான பதில் அளித்தார். அவர் கூறும்போது, ஐட்டம் சாங் எனப்படும் குத்துப்பாடல் இப்போதெல்லாம் அங்கங்களை கவர்ச்சியாக காட்டி ஆடும் பாடல் என அர்த்தமாகிவிட்டது. அப்படி கவர்ச்சி காட்டி நடிக்க நான் தயாரில்லை. அதேசமயம் உணர்வுபூர்வமான பாடல், அதற்கான காரணம் பொருத்தமாக இருந்தால் அப்படி நடிப்பதை தவிர்க்க மாட்டேன் என்றார். தமன்னா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் தொடங்கி பல நடிகைகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக ராதிகா ஆப்தே தாக்கியிருக்கிறார் என்று கோலிவுட்டில் சிலர் விமர்சிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here