Home Tamil Cinema News தனுஷுக்கு வில்லன் நானில்லை என்று கூறும் கௌதம் மேனன்

தனுஷுக்கு வில்லன் நானில்லை என்று கூறும் கௌதம் மேனன்

122

என்னை நோக்கி பாயும் தோட்டாஇயக்குநர் கௌதம் மேனன் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவர் ஆவார். இவரது படங்களில் நாயகர்களைப் போலவே வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். காக்க காக்க ஜீவன், என்னை அறிந்தால் அருண் பாண்டியன், வேட்டையாடு விளையாடு டேனியல் என உதாரணங்கள் பல கூறலாம்.

அந்த வரிசையில் கௌதம் தற்போது தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக தனுஷ்-கௌதம் கூட்டணி அமைத்துள்ளனர்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் எதிர்பார்த்தது போல அமையவில்லை என்றும், அதனால் கவுதம் மேனனே நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இது வெறும் வதந்தி என விளக்கமளித்துள்ளார் கௌதம் மேனன். இது தொடர்பாக ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என கௌதம் கூறியிருக்கின்றார்.