Home Tamil Cinema News குட்டிப் பட்டாளம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் இமான் அண்ணாச்சி

குட்டிப் பட்டாளம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் இமான் அண்ணாச்சி

121

Imman Annachi  in Azhagan Murugan Tamil Movie Stills

காமெடி நடிகர்கள் சமீபகாலமாக ஹீரோவாக மாறி வருகின்றனர். வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வரிசையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியும் இடம் பெற இருக்கிறார்.

சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டிச்சுட்டீஸ் போன்ற நிகழ்சிகளின் மூலம் பிரபலமான இமான் அண்ணாச்சி தற்போது குட்டிப் பட்டாளம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக புரோமோஷன் பெற்றிருக்கிறார்.

சென்னைக் காதல் படத்தில் அறிமுகமானவர் இமான் அண்ணாச்சி. தொடர்ந்து கோலி சோடா, காக்கிச்சட்டை மற்றும் புலி போன்ற படங்களில் காமெடியனாகக் கலக்கிய இமான் அண்ணாச்சி தற்போது ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

இமான் அண்ணாச்சி ‘குட்டிப் பட்டாளம்’ என்ற படம் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் மாஸ்டர் ஏ.வி.பாலா உட்பட 20 குழந்தைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை ரவிதம்பி இயக்குகிறார். இவர் இப்படம் குறித்து கூறும்போது:

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவராக இமான் அண்ணாச்சி இருந்து வருகிறார். என்னுடைய கதைக்கு இமான் அண்ணாச்சி பொருத்தமாக இருப்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறேன். இப்படம் ஜாலியான பொழுதுபோக்கு படமாக உருவாக்க இருக்கிறோம். இப்படத்தை பார்க்கும்போது ரசிகர்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.