Home Tamil Breaking News குஜராத் மாநிலத்தில் மீண்டும் கனமழை – வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குஜராத் மாநிலத்தில் மீண்டும் கனமழை – வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

23

குஜராத் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக வால்சாத் ((Valsad)) மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பீகார், ஒடிசா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை, கடந்த சில நாட்களாக ஓய்ந்துள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாபி ((Vapi)) உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தில் சூழந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.