Home Tamil Breaking News வரும் நாட்களில் உரி தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழலாம்: தளபதி பிபின் ராவத்

வரும் நாட்களில் உரி தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழலாம்: தளபதி பிபின் ராவத்

71
SHARE

இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று டெல்லியில் கூறியதாவது:

நாட்டின் உட்புற பகுதிகளில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. வரும் நாட்களில் உரி தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழலாம் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்திய ஆயுதப் படைகளை விரைந்து நவீனப்படுத்துவது அவசியம். மேற்கு மற்றும் வடக்கு எல்லைப்புற பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பதும் உளவுத் தகவல் பெறுவதும் மிகவும் அவசியம்.

எல்லைப்புற பகுதிகள் மட்டுமின்றி உட்புற பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த எலெக்ட்ரானிக் தளவாட போர் முறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து தரப்பினருடன் பேச்சு நடத்த மத்திய அரசு மத்தியஸ்தரை நியமித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. ஊருடுவல் குறைந்துள்ளது.

இவ்வாறு ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here