Home Tamil Breaking News கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு தண்டனை குறைப்பு

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு தண்டனை குறைப்பு

15

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரசேவகர்கள் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்திக்கு சென்றனர். பிறகு அவர்கள் அங்கிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் மூலம் பிப்ரவரி 27-ந்தேதி சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ரெயில் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையம் வந்தபோது கரசேவகர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்த எஸ்-6 பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவத்தில் கரசேவர்கள் 59 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் வகுப்பு கலவரம் வெடித்தது. இதில் 1,200 பேர் உயிர் இழந்தனர்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி நானாவதி தலைமையில் சிறப்பு விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்தது.

கீழ்கோர்ட்டு 11 பேருக்கு விதித்த தூக்குத் தண்டனையை கடுங்காவல் ஆயுள்தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதேநேரம் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரின் தண்டனையை குறைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

நீதிபதிகள் தங்களது உத்தரவில், ரெயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை ரெயில்வே நிர்வாகமும், மாநில அரசும் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும். ஊனம் அடைந்தவர்களுக்கு அவர்களின் ஊனத்துக்கு தக்கவாறு இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் மாநில அரசு சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்க தவறியதே இந்த சம்பவத்துக்கு காரணம். இதேபோல் ரெயில்வே நிர்வாகமும் சரிவர செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.