Home Tamil Breaking News பூஜா விடுமுறையால் களைகட்டும் பூ விற்பனை.. விலை உயர்வு..

பூஜா விடுமுறையால் களைகட்டும் பூ விற்பனை.. விலை உயர்வு..

75
SHARE

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பூஜை செய்வதற்காக அதிகளவில் மக்கள் பூக்களை வாங்குவார்கள். குறிப்பாக சாமந்திப்பூவும், செண்டுமல்லி பூக்களால் கட்டிய மாலைகள், பூச்சரங்களை வாங்கி பூஜைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு நாளை ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட அனைத்து பூ வகைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு பூ வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு சாமந்தி பூ விளைச்சல் அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.180க்கும், ஒரு முழம் பூ ரூ.30க்கும் விற்றது.

இந்த ஆண்டு பூ விளைச்சல் பாதியாக குறைந்து விட்டதால் சாமந்திப்பூ விலை கிலோவுக்கு ரூ.100 வீதம் உயர்ந்து ரூ.280க்கு விற்கிறது. இதனால் ஒரு முழம் சாமந்திப்பூ ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல சம்பங்கி பூ விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முன்பு ஒரு கிலோ ரூ.70க்கு விற்ற சம்பங்கி தற்போது ரூ.250 ஆகவும், ரூ.120க்கு விற்ற மல்லிகை பூ ரூ.500 ஆகவும், ரூ.50க்கு விற்ற செண்டுமல்லி தற்போது ரூ.120க்கும் விற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here