Home Tamil Sports News இலங்கைக்கு எதிரான தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்று அபாரம்

இலங்கைக்கு எதிரான தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்று அபாரம்

30

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

49.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. திரிமன்னே 67 ரன்களும், மாத்யூஸ் 55 ரன்களும் எடுத்தனர்.

புவனேஸ்குமார் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 16 ரன்களுக்கும், ரஹானே 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக விளையாடிய பாண்டே 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து பந்துகளை விளாசிய கோலி சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 30வது சதமாகும்.

விராட்கோலி, ஜாதவ் இருவரும் விரைந்து ரன்களைக் குவித்தனர். 46.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 110 ரன்களுடனும், ஜாதவ் 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்மூலம் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்துள்ளது.