Home Tamil Movie Reviews இறைவி – விமர்சனம்

இறைவி – விமர்சனம்

378
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிகளை தொடர்ந்து அடுத்து ஒரு உன்னதமான படைப்பான இறைவியை கையில் எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதில் தன் பேவரட் கூட்டணியான விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா வர, புதிதாக உள்ளே வந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இப்படம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

2.7
இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: சி.வி குமார்
நடிகர்கள்: விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி, பூஜா, அஞ்சலி, ராதாரவி

பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிகளை தொடர்ந்து அடுத்து ஒரு உன்னதமான படைப்பான இறைவியை கையில் எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதில் தன் பேவரட் கூட்டணியான விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா வர, புதிதாக உள்ளே வந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இப்படம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

Iraivi

காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.

இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.

Iraivi-Movie-Review-Rating

மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்படுகிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அதேசமயம், அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது.

iraivi-movie-01

இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அவரது மனைவி கமாலினி முகர்ஜி, அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.

இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நடித்த அத்தனை பேரும் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்துக்கொண்டு இருந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு பின்னி பெடலெடுத்து இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

iraivi 2

குடிகாரனாகவும், கணவனாகவும், படைப்பாளியாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும் என அவரது நடிப்பு அவருக்கென இருந்த எல்லைகளை அடித்து உடைத்துவிட்டது.
விஜய் சேதுபதிக்கு க்ளாஸ் ஓப்பனிங் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி வைத்த பயணம், இறைவி மூலம் ஒரு மாஸ் ஓப்பனிங்கை கொடுத்துவிட்டது. நிச்சயம் விஜய் சேதுபதிக்கு இந்தப் படமும் ஒரு மைல்கல் எனலாம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலியும் தனது நடிப்பால் மிரட்டுகிறார். எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக கமாலினி முகர்ஜி, குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வந்தாலும் சண்டைப்போட்டு அத்தனையும் சகித்து கொண்டு அவருடனே குடும்பம் நடத்துகிறார். பெண்கள் எத்தனை மார்டனாக மாறினாலும் அவர்களுக்கு என்று ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள் என்பதை கமாலினி முகர்ஜி கதாபாத்திரம் காட்டுகிறது.

Iraivi Movie 3

பாபி சிம்ஹா என்ன கெஸ்ட் ரோல் போல் வருகிறார், போகிறார் என்று பார்த்தால், கிளைமேக்ஸில் பெரிய திருப்பமே இவரால் தான் வருகிறது. ஜிகர்தண்டாவிற்கு பிறகு தடுமாறிய பாபியை மீண்டும் கார்த்திக் கரையேற்றிவிட்டார்.

படத்தின் டெக்னிக்கல் விஷயத்தில் கார்த்திக் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் வழக்கம் போல் உயிர் கொடுக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஷாட் போதும். நம்மெல்லாம் யார் சார், ஆண் நெடில், இவர்கள் பெண் குறில், ஆண்கள் என்கின்ற திமிரு, உலகத்துலையே கேவலமான படைப்பு ஆண் என்று சொல்லும் போது படம் பார்க்கும் அத்தனை ஆணும் கைத்தட்டுகிறார்.

மொத்தத்தில் “இறைவி” – பெண்களின் மீதான வன்முறையை எடுத்து கூறும் படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here