Home Tamil Cinema News ரகசியங்களை அறியத் தூண்டும் இருமுகன் டீசர்

ரகசியங்களை அறியத் தூண்டும் இருமுகன் டீசர்

263

Iru Muganஇருமுகன் திரைப்படம் விக்ரம் நடிப்பில் உருவாகிவருகிறது. நேற்று இப்படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் வெளிவந்தவுடன் 2 லட்சம் ஹிட்ஸை தாண்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

விக்ரம் முதல் காட்சியிலேயே ஒரு மல்யுத்த சண்டை போட்டியில் இருப்பது போல் தெரிகின்றது. படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர்.

அதனையடுத்து சரியாக 0.29 நொடியில் நயன்தாரா கண்கள் பெரிதாகின்றது, அடுத்து சண்டை காட்சிகள் வருகின்றது. நயன்தாரா கண்கள் பெரிதாவதுபோல் விக்ரம் கண்கள் டீசரின் 0.36 நொடியில் பெரிதாகின்றது.

இருதியில் விக்ரம் முகமூடி போட்டுக்கொண்டு எதையோ ஆராய்ச்சி செய்கிறார். இதன் மூலம் இந்த படம் ஒரு அறிவியல் சம்மந்தப்பட்ட படமாகத்தான் இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.