Home Tamil Movie Reviews இறுதிச்சுற்று – விமர்சனம்

இறுதிச்சுற்று – விமர்சனம்

597
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

பாக்ஸிங், பாலிடிக்ஸ், செலக்ஷன் கமிட்டியினரின் சபல புத்தி என, ஒரு பெண் இயக்குனரால் புதிய களத்தில். இப்படியும் மிரட்டலான படம் எடுக்க முடியும் என காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கும் சுதா கொங்கராவிற்கு நாம் எழுந்து நின்று பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

மொத்தத்தில் இறுதிச் சுற்று - வெற்றிச் சுற்று!

3.7
இயக்கம்: சுதா கொங்கரா
ஒளிப்பதிவு: சிவக்குமார் விஜயன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: ஒய் நாட்ஸ்டுடியோஸ், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
நடிகர்கள்: மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சர்க்கார், ராதாரவி, நாசர், தேவ், ஜாகிர் உசேன், காளி வெங்கட், பிபின்
B5yz-0pCcAEGjc9

மாதவன் தனது முந்தய படங்களில் இல்லத அளவுக்கு உடலை தெம்பாக்கி நடித்திருக்கும் படம் ‘இறுதிச்சுற்று’. இதில் மாதவன் குத்துச்சண்டை வீர்ராகவும், கோச்சாகவும் நடித்திருக்கிறார்.பெண்களுக்கான இந்திய குத்துச்சண்டை தேர்வு கமிட்டியில் இருக்கும் தவறான குறைபாடுகளை அழகாக தோலுரித்து காட்டியிருக்கிறது இருதிச்சுற்று. மேலும் குத்துச்சண்டை விளையாட்டில் நம் வீராங்கனைகளின் சாதனைகளையும் அழகாக பட்டியலிட்டு காட்டியிருக்கின்றது.

பெண்களுக்கான முன்கோபக்கார பாக்ஸிங் கோச்சராக மாதவனை காட்டி படத்தின் கதை தொடங்குகிறது. சில வருடங்களுக்கு முந்தைய பந்தயத்தில் நடந்த பாக்ஸிங் பாலிடிக்ஸால் தன் மனைவியையும், உடல் தகுதியையும் ஒரு சேர இழந்த பாக்ஸிங் வீரராக மாதவன். ஆனாலும் பாக்சிங்கிற்காக தன், உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கும் அவர். பெண்களுக்கான குத்துச்சண்டை கோச்சாக ஹரியானாவில் இருக்கிறார்.

acbef626-2672-4039-8113-985718727196

பாக்ஸிங் பாலிடிக்ஸால் சென்னைக்கு தூக்கியடிக்கப்படும் அவர். இங்கு வந்து மீனவ குப்பத்தில் பாக்சிங் திறமைகளுடன் சுற்றித் திரியும் ரித்திகா சிங்கை தேடிப் பிடித்து இந்திய வீராங்கனையாகவும், இண்டர்நேஷனல் வீராங்கனையாக்கி இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவதும், அவர் மூலம் இழந்த இல்வாழ்க்கையை திரும்ப பெருவதும் தான் இறுதிச்சுற்று படத்தின் கரு.

படத்தில் மாதவன் குத்துச்சண்டை கோச்சாக மட்டுமில்லாமல் பெண்கள் மீது சல்லாபம் கொண்டவராக காட்டியிருக்கின்றனர். பொம்பளை பொறுக்கி பாக்சிங் கோச்சாக மாதவன், செம க்ளாஸ். அவர் வரும் சீன்களில் எல்லாம் தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கிறது.

madhavan hot

பீர் குடித்தபடி விசாரணை கமிஷன் வந்து அமர்ந்து கொண்டு நான், பீர் குடிக்கும் நேரத்தில் நீங்க மீட்டிங் ஏன் வச்சீங்க? என கோபப்படுவதில் தொடங்கி. இந்தியாவுக்காக ஒரு சிறந்த வீராங்கனையை தன் பணத்தில் உருவாக்குவது வரை. சகலத்திலும் சக்கை போடு போட்டு ஒரு முண்ணனி னடிகரை போல் கைத்தட்ட வைத்திருக்கிறார் மாதவன்.

பாக்ஸிங் பாலிடிக்ஸாலும் பாக்சிங்கில் தான் தோற்றதாலும். மனைவி மாற்றானுடன் ஓடிப்போன துக்கத்தை காட்டிக் கொள்ளாமல் உடன் படுக்கும் பெண்களில் தொடங்கி, பாக்சிங் செலக்ஷன் கமிட்டி சீப்-தேவ் வரை ஆங்காங்கே தான் படும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு குத்துசண்டையில் இந்தியாவே மெச்சும் ஒரு வீராங்கனையை உருவாக்குவதில் மாதவன் காட்டும் முனைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

irudhi-suttru-va-machaney-song-teaser1

மீனவ குப்பத்து அடாவடிப் பெண்ணாக, வீராங்கனை மதியாக ரித்திகா சிங் பக்கா! நிஜமான குத்துசண்டை வீராங்கனை என்பதாலோ என்னவோ., அது, சம்பந்தப்பட்ட கதையில் அம்மணி வெளுத்துகட்டியிருக்கிறார். பாக்சிங் ரிங்கிற்குள் அவர் காட்டும் சாகசத்திலாகட்டும். கிழம் கிழம் என்றபடி மாதவனிடம் மையல் கொள்வதிலாகட்டும். எல்லாவற்றிலும் முற்றிலும் புதுசாக தெரிகிறார் ரித்திகா.

லக்ஸாக ரித்திகாவின் அக்காவாக வரும் மும்தாஜ் சர்க்கார், மாதவனின் ஓடிப்போன பொண்டாட்டியின் அப்பாவாக வரும் ராதாரவி, ஜூனியர் கோச் நாசர், தேவ் மற்றும் ஜாகிர் உசேன், பல்லீந்தர் கவுர் சர்மா, நாயகி ரித்திகாவின் குடிகார குப்பத்து அப்பாவாக வரும் காளி வெங்கட், பிபின் உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Irudhi Suttru (1)

சதீஷ் சூர்யாவின் நச்-டச் படத்தொகுப்பு, சிவக்குமார் விஜயனின் ‘பளிச்’ ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணனின் மெலடி, மிரட்டும் இசை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இயக்குனர் சுதா கொங்கராவின் எழுத்து, இயக்கத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.

சார் நாங்க கக்கூஸ் கழுவத் தான் லாயக்கு, ஆனா கப்பு உங்க வாயிலிருந்துல்ல வருது. உள்ளிட்ட அருண் மாத்தீஸ்வரனின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.

பாக்ஸிங், பாலிடிக்ஸ், செலக்ஷன் கமிட்டியினரின் சபல புத்தி என, ஒரு பெண் இயக்குனரால் புதிய களத்தில். இப்படியும் மிரட்டலான படம் எடுக்க முடியும் என காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கும் சுதா கொங்கராவிற்கு நாம் எழுந்து நின்று பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

ஒய் நாட்ஸ்டுடியோஸ், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களுடன் யுடிவிமோசன் பிக்சர்ஸ் பெரிய நிறுவனமும் அசோசியேட்டாக இணைந்து தமிழ், இந்தி இரு மொழிகளிலும் பாக்சிங் சம்பந்தப்பட்ட பக்கா கதையுடன் படமாக வந்திருக்கும் இறுதிச் சுற்று.

மொத்தத்தில் இறுதிச் சுற்று – வெற்றிச் சுற்று!