Home Tamil Cinema News பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயனா! – சிம்பு விளக்கம்

பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயனா! – சிம்பு விளக்கம்

198

simbu siva

சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை தற்போது முடியாது போல. தற்போது பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நடந்தது.

விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்துள்ளனர், இதை தொடர்ந்து சிம்புவின் ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2 காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தான் இந்த பீப் பாடலை கசியவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதை சிம்பு மறுத்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் சிம்பு, ”சிவகார்த்திகேயன் பீப் பாடலை லீக் செய்யவில்லை. வேண்டுமென்றே சிலர் சிவகார்த்திகேயன் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

வதந்திகளை நம்பாதீர்கள். ‘பீப்’ பாடல் விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அவர் என்னை பார்த்துக்கொள்வார். நல்லிணக்கத்தையும், உண்மையையும் நான் நம்புகிறேன்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.