Home Tamil Breaking News கைது நடவடிக்கையால் அபாயசங்கிலியை அனாவசியமாக பிடித்து இழுக்கும் நிகழ்வுகள் குறைந்துள்ளது..

கைது நடவடிக்கையால் அபாயசங்கிலியை அனாவசியமாக பிடித்து இழுக்கும் நிகழ்வுகள் குறைந்துள்ளது..

31

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்துவதை தடுக்க, சம்பந்தபட்ட பயணியை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதால் அது போன்ற நிகழ்வுகள் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள், ஆந்திரா வழியாக வட மாநிலங்கள் செல்லும் ரெயில்களில் , அபாய சங்கிலியை பிடித்து இழுக்கும் நிகழ்வுகள் அதிகரித்தது. குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இந்த புதிய முறை முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ரெயிலில் சங்கிலியை இழுக்கும் நபரை , ரெயில்வே சட்டம் 141வது பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யும் ரெயில்வே பாதுகாப்புபடை காவல்துறையினர், அவரின் பயணம் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அவரை உடனடியாக பிணையில் விடுத்து விடுவார்கள். அவர்களிடம் அபராதமும் வசூலிக்கமாட்டார்கள். ஆனால் அவர்களை வேறொரு நாளில் வழக்கு விசாரணைக்காக மீண்டும் சென்னைக்கு வரவழைத்து நீதிபதியின் முன்பு ஆஜராகவைத்து அவரது உத்தரவின்பேரில் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அப்படி ஆஜராகாமல் ஏமாற்றும் நபருக்கு முதலில் சம்மனும், தொடர்ந்து ஆஜராகாத நபர் மீது பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில்வே நீதிமன்றத்தில் அப்படிபட்ட நபர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலித்த நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கிறது. அபாய சங்கிலியை இழுத்ததற்காக வழக்கிற்கு வந்து செல்லும் செலவு, அலைச்சல் மற்றும் அபராதம் ஆகியவை தண்டனையாக கிடைக்கிறது. இந்த புதியமுறை நல்ல பலனை கொடுத்துள்ளது என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts