Home Tamil Movie Reviews ஜாக்சன் துரை – விமர்சனம்

ஜாக்சன் துரை – விமர்சனம்

413
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் "ஜாக்சன் துரை". 'பர்மா' புகழ் தரணி தரண் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜாக்சன் துரை' படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

2.7
இயக்கம்: தரணி தரண்
ஒளிப்பதிவு: யுவராஜ்
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: எம்.எஸ் சரவணன்
நடிகர்கள்: சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன்

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. ‘பர்மா’ புகழ் தரணி தரண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜாக்சன் துரை’ படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

Jackson-Durai-Movie-poster

நடிகர் சத்யராஜ் முதன்முறையாக இந்தப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார். கோலிவுட்டில் பேய்களின் ஆட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கும் ஜாக்சன் துரைக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம்.

படத்தி கதைப்படி அயன்புரன் என்ற ஊரில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களாவில், இரவு 9 மணிக்கு பிறகு ஜாக்சன் என்ற பேய் ஊரில் நடமாடுவதாக ஒரு செய்தி உலா வருகின்றது. இதை தொடர்ந்து அந்த ஊரில் உண்மையாகவே பேய் இருக்கிறதா? இல்லை வேறு எவனும் செய்யும் வேலையா இது? என கண்டுபிடிக்க ஸ்பெஷல் ஆப்ரேஷன் ஒன்றிற்கு சிபிராஜை நியமிக்கின்றனர்.

Jackson-Durai

சிபிராஜுக்கு சென்ற இடத்தில் ஊர்த்தலைவர் மகள் பிந்துமாதவியின் மீது காதல் ஏற்படுகிறது, அதே பெண்ணின் மீது முறைமாமன் கருணாகரனுக்கும் காதல். இருவரும் முறைத்துக்கொள்ள, யார் அந்த ஜாக்சன் பங்களாவிற்கு சென்று 7 நாட்கள் கழித்து வெளியே வருகிறார்களோ அவர்களுக்கு தான் என் பெண் என ஊர்த்தலைவர் சொல்கிறார்.

அதை தொடர்ந்து இருவரும் அந்த பங்களாவிற்குள் செல்ல, ஒரு ஆவி இல்லை பல ஆவிகள் உலா வருகின்றது. அவர்கள் எல்லாம் யார், எதற்காக இங்கு இருக்கிறார்கள், அவர்களிடம் இருந்து சிபி தப்பித்தாரா, பிந்து மாதவியை திருமணம் செய்தாரா என்பதை நகைச்சுவை கூறியிருக்கிறது ஜாக்சன் துரை.

jackson-durai-movie-trailer

சத்யராஜ் எந்த கதாபாத்திரம் என்றாலும் தூள் கிளப்புவார். இதில் புரட்சி வீரன், பேய் என செம்ம ஸ்கோர் செய்கிறார். இவருக்கு நிகராக ஒரு வெள்ளைக்காரன் தான் வில்லன், அவரும் நன்றாக நடித்துள்ளார்.

சிபிராஜ் பலரும் நம்மிடம் ஏதோ எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து ஒரு நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். போலீஸ் கதைக்கு மிகவும் பொருத்தமான ஆள், வெறும் வெட்டி பில்டப் மட்டும் காண்பித்து, பின் பேய் பங்களாவில் மாட்டிகிட்டு திண்டாடும் இடம் அருமை.

jackson-durai-movie-trailer

அதிலும் யாரோ வேஷம் போட்டு இருக்கிறார்கள் என கூறிவிட்டு பேய்களுக்கு பயப்படாமல் நடிக்கும் இடம் அப்லாஸ் வாங்குகிறார். ஆனால், இத்தனை பெரிய உருவம் பயப்படும் காட்சியில் மட்டும் கொஞ்சம் பின் வாங்குகிறார்.

மொட்டை ராஜேந்திரன் வந்தாலே சிரிப்பு கேரண்டி தான் போல. அதிலும் கொக்கி குமாரு ஸ்டைலில் அவர் அழுவது, வேட்டையாடு விளையாடு கமல் ஸ்டைலில் கதவை மூட சொல்வது என ரணகளம் செய்கிறார்.

படத்தின் மற்றொரு ஹீரோ கருணாகரன் என்று சொல்லிவிடலாம், கவுண்டர் வசனங்களால் தியேட்டரையே சிரிக்க வைக்கின்றார். அதிலும் ஒரு குட்டி பேயிடம் இவர் செய்யும் கலாட்டாவால் திரையரங்கில் விசில் பறக்கிறது.

jackson-durai-tamil-movie-sathyaraj-pictures

படத்தின் முதல் பாதி என்ன கதை என்றே தெரியவில்லை என்றாலும், ஜாலியாக செல்கிறது. ஏன் இந்த பங்களாவில் பேய் இருக்கிறது என்ற ப்ளாஷ்பேக்கும் நன்றாக இருக்கிறது. பேய் பட கான்செப்டில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான படம் என்று கூட கூறலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஏனோ நகைச்சுவை முழுவதுமாக இருந்தாலும் திரைக்கதை கொஞ்சம் டல் அடிக்கின்றது. அதிலும் ஒரு காட்சி திரும்ப திரும்ப வருவது பொறுமையை சோதிக்கின்றது.

இரண்டாம் பாதியில் வரும் ஒரு சில காட்சிகள் நீளம் போல் தெரிகிறது. பேய் படம் என்பதற்காக கொஞ்சமாவது லாஜிக் என்ற விஷயத்தை பார்த்து இருக்கலாம். தேவையற்ற பல காட்சிகள் வருகிறது, குறிப்பாக கொச்சை தமிழ் பேசினால் பேய்க்கு பிடிக்காது என்று கூறுகின்றனர், மற்றொரு காட்சியில் பேயே அப்படித்தான் பேசுகிறது.

Bindu Madhavi in Jackson Durai Movie Stills

யுவராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படம்பிடித்துள்ளது. சித்தார்த் விபினின் பின்னணி இசை மிரட்டவைக்கிறது, பேய் படங்களுக்கு ஏற்ற பின்னணி இசையை பல ஹாலிவுட் படங்களை பார்த்து இசையமைத்துள்ளாரா என்று யூகிக்க தோன்றுகிறது.

மொத்தத்தில் “ஜாக்சன் துரை” – திகில் கலந்த காமெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here