அவசர சட்டம் வேண்டாம் நிரந்தர சட்டமே தேவை – அலங்காநல்லூர் மக்கள் போர்கொடி

அவசர சட்டம் வேண்டாம் நிரந்தர சட்டமே தேவை – அலங்காநல்லூர் மக்கள் போர்கொடி

28

ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் தை முதல் நாளிலிருந்து ஒன்று திரண்டு அமைதி வழியில் புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு அடிபணிந்த தமிழக அரசு தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

அவசர சட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்கிறது தமிழக அரசு. ஆனால் இந்த அவசர சட்டத்தை ஏற்கவே முடியாது, எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் என்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள். மேலும் ஒவ்வொரு முறையும் ரோட்டுக்கும் கோர்ட்டுக்கும் நாங்கள் செல்ல முடியாது, ஏனெனில் அவசர சட்டம் 6 மாதத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்.

நிரந்தரமாக எந்த தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் வரை தங்களது போராட்டம் ஓயப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் அலங்காநல்லூர் மக்கள்.

Related Posts

NO COMMENTS

LEAVE A REPLY