Home Tamil Cinema News மிருதன் படத்தால் ஜெயம் ரவிக்கு கிடைத்த பெருமை

மிருதன் படத்தால் ஜெயம் ரவிக்கு கிடைத்த பெருமை

135

jayam-ravi-still

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான மிருதன் படம், தென்னிந்திய சினிமாவில் முதல் ஜூம்பி படம் என்ற பெருமையை பெற்றது. தமிழில் மிருதன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுமில்லாமல் வசூலையும் குவித்தது.

இந்த நிலையில் இப்படக்குழுவினருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் கனடாவில் நடைபெறவிருக்கும் ஃபேன்டஸியா ஃபிலிம் ஃபெஸ்டிவலி’ல் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருக்கிறதாம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனை ஜெயம் ரவி தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், எந்திரன் படத்திற்கு பிறகு அங்கு திரையிடப்படும் இரண்டாவது தமிழ் திரைப்படம் இது என்று தெரிவித்திருக்கிறார்.