Home Tamil Cinema News ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு ரெடி

ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு ரெடி

105

Bhoologam-Movie

கடந்த வருடத்தில் ‘பூலோகம்’ படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகியுள்ளது, ஆனால் இதுவரை ரிலீஸ் குறித்த தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய டிரைலர் ஒன்று நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியிருக்கிறது. அதோடு படத்தையும் வரும் 24ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு.

ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், தனி ஒருவன் என ஏற்கெனவே இந்த வருடத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸாகியுள்ளது. அதோடு ‘தனி ஒருவன்’ படத்தின் பெரிய வெற்றி மூலம் ஜெயம் ரவியின் மார்க்கெட்டில் பெரிய திருப்புமுனையும் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தோஷத்தோடு, தற்போது நீண்டநாள் கிடப்பில் இருந்த ‘பூலோகம்’ படமும் வெளியாகவிருப்பதால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜெயம் ரவி.

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்க, ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘பூலோகம்’. 2010ஆம் ஆண்டே துவங்கப்பட்ட இப்படம் சிற்சில காரணங்களால் தாமதமாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here