Home Tamil Cinema News உலகின் அழகுப் பெண்மணி ஜெனிபர் அனிஸ்டன் தானாம்!

உலகின் அழகுப் பெண்மணி ஜெனிபர் அனிஸ்டன் தானாம்!

109

Jennifer Aniston

2016-ம் ஆண்டிற்கான உலகின் மிக அழகான பெண்ணாக அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் அனிஸ்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவினை “பீப்பிள்” பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனிபர் அனிஸ்டன் தன் அழகைப் பாதுகாக்க ஆண்டுக்கு ரூபாய் 72 லட்சம் செலவழிக்கின்றாராம்.

43 வயதாகும் ஜெனிபர் அனிஸ்டன் இப்போதும் கூட ரசிகர்களின் விருப்ப நாயகியாக உலா வருகிறார். இது மட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

ஜெனிபர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூபாய் 72 லட்சம் செலவு செய்கிறாராம். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூபாய் 20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூபாய் 48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூபாய் 46 ஆயிரமும் செலவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here