Home Tamil Movie Reviews ஜில் ஜங் ஜக் – விமர்சனம்

ஜில் ஜங் ஜக் – விமர்சனம்

796
TheNeoTV Tamil Movie Rating
  • Over Rating

Summary

ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்களில், ‘ஷூட் த குருவி’ பாடலைத் தவிர படத்தில் வேறெந்த பாடலும் இடம்பெறவில்லை. படத்தின் பின்னணி இசை மிகப்பெரும் பல என கூறலாம், எந்த காட்சிக்கு எப்படி இசை வேண்டும் என்பதை இயக்குனர், இசையமைப்பாளர் இருவருமே நன்கு அறிந்து கொடுத்துள்ளனர். வித்தியாசமான முயற்சி, நாவல் அமைப்பில் காட்சியமைப்புகள் என புது முயற்சிக்கு தீரஜ், சித்தார்த்தை இதற்காக பாராட்டலாம்.

2.5
இயக்கம்: தீரஜ் வைத்தி
ஒளிப்பதிவு: ஸ்ரேயா ஸ்கிருஷ்ணா
இசை: விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு: சித்தார்த், ஏடாகி எண்டர்டைன்மெண்ட்
நடிகர்கள்: சித்தார்த், சனந்த் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன், ராதா ரவி, நாசர், ஆர்.ஜே. பாலாஜி

டார்க் ஹியூமர் எனப்படும் நகைச்சுவை ட்ரண்டை பலர் உருவாக்கினாலும் கமல் தான் இதில் கில்லாடி, இதே பார்முலாவில் தமிழில் சூதுகவ்வும், மூடர்கூடம் என பல படங்கள் வர அதே வரிசையில் தீரஜ் வைத்தி இயக்கத்தில் நடிகர் சித்தார்த் ‘ஏடாகி எண்டர்டைன்மெண்ட்’ எனும் பட நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து நாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் படம் தான் “ஜில்.ஜங். ஜக்”.

5-reasons-why-Jil-Jung-Juk-has-raised

 

உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி, பெட்ரோல் விலை ஜெட் வேகத்தில் உயர 2020ல் படம் ஆரம்பிக்கின்றது. தேவநாயகம் பெரிய கடத்தல் காரர், அவருடைய தொழில் நஷ்டமடைந்து கொண்டே வர, கடைசியாக இருக்கும் 4 கிலோ போதைபொருளை சீனாகாரர்கள் சிலருக்கு விற்க முயற்சி செய்கிறார்.

 

இதற்காக போதை மருந்தை ஒரு விஞ்ஞானியின் உதவியுடன் காரில் பெயிட்டு போல் அடித்து ஒரு பிங் கலர் வண்டியை ரெடி செய்கிறார். இந்த காரை சொன்ன நேரத்தில் கொண்டு சேர்க்க, ஜில்(சித்தார்த்), ஜங்(அவினாஷ் ரகுதேவன்), ஜக்(சனந்த்) என மூன்று இளைஞர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

jil-jung-juk

மூவரும் காரை ஓட்டி செல்லும் இடத்தில் எதிர்ப்பாராத விதமாக பல அசம்பாவிதம் நடந்து கார் வெடிக்கின்றது, இதை தொடர்ந்து தேவநாயகத்திற்கு தெரிந்தால் உயிரை எடுத்துவிடுவான்.இதன் காரணமாக கொஞ்சம் தன் மூளையை பயன்படுத்தி தேவநாயகத்தின் பரம எதிரியான ரோலெக்ஸ் ராவ்த்தார்(ராதாரவி)யை தூண்டி விடுகிறார் சித்தார்த். இதன் பிறகு அந்த கும்பலிடம் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்து தான் படத்தின் கதை.

 

ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நாயகியே இல்லாத ஒரு வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய ஸ்டைலில் படமாக்கத் துணிந்த சித்தார்த்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! சித்தார்த்தின் எண்ணத்திற்கு, தன்னால் முடிந்தளவு வண்ணம் பூசி ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி.

Jil-Jung-Juk-Movie-Review

இயக்குனரின் எனர்ஜியான, புதுமையான சிந்தனைகளை படத்தின் முதல்பாதி முழுக்க ஆங்காங்கே நிச்சயம் உணர முடியும். ஆனாலும், ஒரு முழுமையான சுவாரஸ்ய படத்தைத் தருவதற்குரிய திரைக்கதையை எழுவதில் தீரஜ் வைத்தி சற்று தடுமாறி இருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஒவ்வொரு கேரக்டர்களின் அறிமுகம், அவர்கள் அடிக்கும் காமெடிகள் என முதல்பாதியில் விறுவிறுப்பாகவும், சின்னச் சின்ன சுவாரஸ்யங்களுடனும் நகர்ந்த படம், இரண்டாம்பாதியில் எப்படி நகர்வது எனத் தெரியாமல் க்ளைமேக்ஸ் வரை ஊர்ந்து செல்கிறது.

ஹாலிவுட் பாணியில் உருவாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்ட இப்படத்தை, அப்படங்களைப் போலவே 90 நிமிடங்களில் முடித்திருந்தால் ஒருவேளை இன்னும் சுவாரஸ்யமான ஒரு படமாக அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

Jil-Jung-Jak

 

ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்களில், ‘ஷூட் த குருவி’ பாடலைத் தவிர படத்தில் வேறெந்த பாடலும் இடம்பெறவில்லை. படத்தின் பின்னணி இசை மிகப்பெரும் பல என கூறலாம், எந்த காட்சிக்கு எப்படி இசை வேண்டும் என்பதை இயக்குனர், இசையமைப்பாளர் இருவருமே நன்கு அறிந்து கொடுத்துள்ளனர். வித்தியாசமான முயற்சி, நாவல் அமைப்பில் காட்சியமைப்புகள் என புது முயற்சிக்கு தீரஜ், சித்தார்த்தை இதற்காக பாராட்டலாம்.

சிவஷங்கரின் கலை இயக்கம், குருட்ஸ் ஸ்னை டரின் படத்தொகுப்பு, ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, தீரஜ் வைத்தியின் எழுத்து ,இயக்கம் உள்ளிட்டவைகளில் ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சிவஷங்கரின் கலை இயக்கமும் திரும்பி பார்க்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘ஜில்.ஜங்.ஜக்’ – காமெடி எனும் போர்வையில் கொஞ்சம் கடி