Home Tamil Movie Reviews ஜித்தன் 2 – விமர்சனம்

ஜித்தன் 2 – விமர்சனம்

354
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

நடிகர் ரமேஷ் ஜித்தன் படம் மூலம் அறிமுகம் ஆனவர், அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன் பெயருடன் ஜித்தனையும் இணைத்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஒரு பெயர் கொடுத்தது அப்படம். அதனை தொடர்ந்து ஜித்தனின் பகுதி இரண்டாக ஆர் .பி.எம்.சினிமாஸ் ராகுல் தயாரித்து வழங்கி, அவரே இயக்கியும் இருக்கும் படம் தான் ‘ஜித்தன் – 2’.

2.3
இயக்கம்: ராகுல்
ஒளிப்பதிவு: எஸ் கே மிட்சல்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: ஆர்பிஎம் சினிமாஸ் (ராகுல்)
நடிகர்கள்: ஜித்தன் ரமேஷ், ஸ்ருட்டி டாங்கே, கருணாஸ், மயில்சாமி, யோகிபாபு, ரோபா சங்கர், சுவாமிநாதன், சோனா

jithan-2

நடிகர் ரமேஷ் ஜித்தன் படம் மூலம் அறிமுகம் ஆனவர், அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன் பெயருடன் ஜித்தனையும் இணைத்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஒரு பெயர் கொடுத்தது அப்படம். அதனை தொடர்ந்து ஜித்தனின் பகுதி இரண்டாக ஆர் .பி.எம்.சினிமாஸ் ராகுல் தயாரித்து வழங்கி, அவரே இயக்கியும் இருக்கும் படம் தான் ‘ஜித்தன் – 2’.

நாயகர் ரமேஷ் இதில் சற்றே, இன்னசென்டாக காட்சியளிக்கும் சூர்யா எனும் பெயருடன் வருகிறார். அவர், இறக்கும் தருவாயில் தன் அப்பா சொன்னபடி, சொந்தமாக ஒரு வீடு வாங்குகிறார்.

கொடைக்கானல் பகுதியில் இருக்கும் எட்டாம் எண் உடைய அந்த வீடு ஒரு பேய் வீடாம். அந்த வீட்டிலிருக்கும் பேய், ரமேஷையும், ரமேஷ் பேய் ஓட்ட கூட்டி வரும் ப்ரண்ட்ஸ், போலீஸ், பெண் மந்திரவாதி உள்ளிட்ட எல்லோரையும் படுத்தும் பாடுதான் ஜித்தன் – 2 படத்தின் கதை.

maxresdefault

ரமேஷ் – சூர்யாவாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பு விஷயத்தில் ஜித்தன் ரமேஷ், ஜித்தன் என்பதை மீண்டும் நிருபித்திருப்பதற்காக பாராட்டலாம்.

பேயாக சிருஷ்டி டாங்கே, மெகாலி, மலையாளபெண் மந்திரவாதி, கருணாஸ், மயில்சாமி, அலட்டல் ஆந்திரா ரவுடியோகி பாபு, சோனா. ஜார்ஜ், லொள்ளு சபா சுவாமிநாதன், நெல் லை சிவா, வேல்முருகன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்.

படத்தின் கதையிலோ, திரைக்கதையிலோ எந்த அழுத்தமோ சுவாரஸ்யமோ இல்லை. இதுபேய் படமாகவும் திகிலூட்டவும் இல்லை, நகைச்சுவையம் செட்டாகவில்லை, சில இடங்களில் ரோபோசங்கரின் வசனங்களும், கருணாஸின் முகபாவனைகளும் சிரிக்க தூண்டுகிறது.

Cfa3KzCUsAAs2Y5

வழக்கமான பேய் பட ஆர்வமும் கூட இல்லை. ஆனால் ஒன்று செய்திருக்கிறார்கள் பேயையே பயப்பட, அழுக வைத்திருக்கிறார்கள் அதுவும் தேவையற்ற காரணத்திற்காக.

‘சின்னகுட்டி நாத்தனா சிம் கார்டை மாத்தினா’ பாடல் கேட்கலாம். படம் ஒரு பக்கம் போய்கொண்டு இருக்க ஸ்ரீ காந்த்தேவாவின் இசை இன்னொரு பக்கம் போகிறது. ஓளிப்பதிவு படத்தொகுப்பு இரண்டும் சுமார். படத்தின் கிராஃபிக்ஸ் அபத்தம்.

மொத்ததில் “ஜித்தன் 2” – பேயையும் ரசிகனையும் மிரண்டு ஓடவைக்கிறது,