ஜோக்கர் படத்துக்கு யு சான்றிதழ்

ஜோக்கர் படத்துக்கு யு சான்றிதழ்

61

 

joker tamil movie

ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ஜோக்கர். இந்தப் படத்தில் சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

பப்பிரெட்டிபட்டி என்கிற கிராமத்தில் இருக்கும் மன்னர் மன்னன்தான் இந்தப் படத்தின் ஜோக்கர். மிகவும் எளிமையான அவருக்கு அரசியல்வாதிகள் மீது கோபம். அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள தனக்கு அவர்களை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் இருக்கா என்ற கேள்விக்கான விடை தேடுவதுதான் கதைக்களமாக உருவாகியிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY