Home Tamil Movie Trailers ஜோக்கர்(Joker) Official Movie Trailer – 2016

ஜோக்கர்(Joker) Official Movie Trailer – 2016

145

ராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம் நடித்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. குக்கூ படத்தை தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கும் ‘ஜோக்கர்’ என்ற புதிய படத்தில் சோமசுந்தரம் நாயகனாக நடித்து வருகிறார். இவர் ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். இப்படத்தின் நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா நடிக்கிறார்கள்.

படத்தின் கதைப்படி “பப்பிரெட்டிப்பட்டி என்கிற கிராமத்தில் இருக்கிற மன்னர் மன்னன்தான் இந்த ஜோக்கர். மிகவும் எளிமையான அவருக்கு அரசியல்வாதிகள் மீது கோபம் அதிகம். ஓட்டுப் போட்டு அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள தனக்கு, அவர்களை டிஸ்மிஸ் செய்யும் உரிமை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு அவர் கண்டுபிடிக்கும் விடைதான் கதைக்களம். இந்தப் படம் நகைச்சுவை காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். இதில் எழுத்தாளர் மு.ராமசாமி, பவா செல்லதுரை, ச.பாலமுருகன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.