‘ஜோக்கர்’ பட்த்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஜோக்கர்’ பட்த்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

39

Joker

இயக்குநர் ராஜூ முருகன் தற்போது ஜோக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தினை இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே குக்கூ படத்தை இயக்கியவர் ஆவார். ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த சோமசுந்தரம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக காயத்ரி, ரம்யா என இரு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜோக்கர் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படத்திற்கு ‘யு’ சான்றிதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி ஜோக்கர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY