Home Tamil Cinema News ஜூலியின் மேல் செம்ம கடுப்பில் ஹரிஷ் கல்யாண்..!

ஜூலியின் மேல் செம்ம கடுப்பில் ஹரிஷ் கல்யாண்..!

36

ஜூலி எனக்கு போன் பண்ணவில்லை, அவர் பொய் சொல்கிறார் என்று பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஜூலி சொன்ன ஒரு பொய்யால் அவரை பலரும் வெறுக்க காரணமாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு ஜூலி அளித்த ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாணுடன் நான் அடிக்கடி போனில் பேசுவதாக கூறியிருந்தார்.

அதற்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ள ஹரிஷ் கல்யாண், “ஜூலி சொன்னது பொய். அவர் எனக்கு ஒரே ஒரு முறை தான் போன் செய்தார். அப்போது கூட இன்டர்வியூ பற்றி தான் பேசினார். வேறு எதுவும் பேசவில்லை” என கூறியுள்ளார்.