Home Tamil Cinema News பாலிவுட்டிற்கு பறந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

பாலிவுட்டிற்கு பறந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

113

image3

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து காக்கா முட்டை படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றார்.

இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடித்துத் தந்தது. தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட்டில் கால்பதிக்கவிருக்கிறார்.

இவருடைய பாலிவுட் முதல் படமே அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது தமிழில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘மனிதன்’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல முக்கிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here